உலகம்

17000 பயணிகளுடன் பிரித்தானிய கப்பலை முடக்கிய பிரான்ஸ்! வெளியான அதிர்ச்சிக் காரணம்

பிரித்தானியாவிற்குச் சொந்தமான எம்பிஸன் (Ambition) எனும் சுற்றுலா சொகுசு கப்பலில் 49 பயணிகள் திடீர் வயிற்று உபாதைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் தற்போது தென்மேற்கு பிரான்ஸ் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்காரணமாக கப்பலில் உள்ள 1,233 பயணிகள் மற்றும் 514 பணியாளர்கள் என மொத்தம் 1,700-க்கும் மேற்பட்டோர் தரையிறங்க முடியாமல் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானிய மற்றும் ஐரிஷ் நாட்டவர்கள் என்பதுடன், ஒரு பிரான்ஸ் நாட்டவரும் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.

நோய்த்தொற்று பரவல்

நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை மூன்று பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய பயணிகள் கப்பலை விட்டு வெளியேற பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக சர்வதேச வட்டராங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், அண்மையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த ஒரு கப்பலில் பரவிய ஹண்டா (Hanta) வைரஸிற்கும் இந்த வயிற்று உபாதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கப்பலில் இருந்த 92 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதகாவும் அவரது மரணத்தில் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button