இந்தியா

பதவியேற்ற கையோடு கரூருக்கு விரையும் முதலமைச்சர் விஜய்? சமூக வலைதளங்களில் வைரல் தகவல்

தமிழக முதலமைச்சராக அண்மையில் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், கரூரில் இடம்பெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசாங்கம் அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சில இந்திய தமிழ் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பதவியேற்ற கையோடு கரூருக்கு விரையும் முதலமைச்சர் விஜய்? சமூக வலைதளங்களில் வைரல் தகவல் | Vijay Rush To Karur Immediately After Taking Oath

இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த 2025 செப்டெம்பர் 27ஆம் திகதி, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பேரணியின் போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கட்டுப்பாடற்ற சூழ்நிலையால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

அந்த பேரணி, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விஜய் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பான இறுதி தீர்மானம் மற்றும் விஜய்யின் பயணத் திட்டம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button