இலங்கை

விஜய்க்கு பாராளுமன்றில் தமிழ் எம்.பி.க்கள் வாழ்த்து மழை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வரலாறு படைத்து திராவிட அரசியலுக்கு முடிவுகட்டி முதலமைச்சராக அரியணை ஏறும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜய்க்கு தமிழ் கட்சிகளினாலும் தமிழ் எம்.பி.க்களினாலும் பாராளுமன்றத்தில் வாழ்த்து மழை பொழியப்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்பின்னர் இடம்பெற்ற சபை அமர்விலேயே தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகமும் அதன் தலைவரான விஜயும் இன்னும் திடமாக தமது அரசியல் பயணத்தை தொடர ஈழத்தின் உறவுகள் சார்பில் தாம் உறுதுணையாக இருப்போம். .ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசுடனும், தமிழகத்தின் புதிய அரசுடனும் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் என தமிழ் கட்சிகள் தமது வாழ்த்தில் தெரிவித்தன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றகுழுத்தலைவரும் எம்.பி.யுமான இரா. சாணக்கியன் அதே கட்சியை சேர்ந்த சிவஞானம் சிறிதரன் எம்.பி., சுயேச்சைக்குழு 17 இன் தலைவரும் எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ,அரச தரப்பு எம்.பி. யான அஸ்லம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நிஸாம் காரியப்பர் எம்.பி. ஆகியோர் இவ்வாறு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button