இந்தியா

பெண்கள் பிரதிநிதித்துவத்திலும் சாதனை படைத்த விஜய்.. வெற்றி வாகை சூடும் 13 தவெக பெண் MLAக்கள்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 23 பெண் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் 13 பெண் வேட்பாளர்கள் சட்டமன்றத்துக்கு தகுதி பெற்று, பெண்கள் பிரதிநிதித்துவத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 23 பெண்கள் தங்களின் வெற்றியைப் பதிவு செய்து, சட்டமன்றத்திற்குள் நுழையவுள்ளனர்.

தமிழ்நாட்டு அரசியல் களத்திற்குப் புதிதாக வந்து சாதனை படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், பெண் பிரதிநிதித்துவத்தில் மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த 13 பெண்கள் வெற்றி வாகை சூடி, சட்டமன்றத்தில் முதல்முறையாகக் கால் பதிக்கவுள்ளனர்.

இது அக்கட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. பிரதான கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட்ட பெண்களில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதே போல, காங்கிரஸ், பாமக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய விடயமாக பார்க்கப்படுவது, ஆளுங்கட்சியாக இருந்த திமுக சார்பில் போட்டியிட்ட 19 பெண் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button