இந்தியா

முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி துணை முதலமைச்சர் உதயநிதி வெற்றி; எடப்பாடி பழனிசாமியும் வெற்றி ;கட்டுப்பணத்தை இழந்த சீமான்

சென்னை: 2026 ஆண்டுக்காக நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில்தமிழகத்தின் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்துள்ள நிலையில் அவரின் மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார்.

2026 ஆண்டுக்கக்க நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் சென்னை கொளத்தூர் தொகுதியில்போட்டியிட்ட தி,மு.க. தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியடைந்ததுள்ள நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் தலைமையிலான தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 2011ஆம் ஆண்டு உருவான தொகுதி . இது உருவானது முதலே ஸ்டாலின் தான் வென்று வருகிறார். இதுவரை நடந்த 3 தேர்தல்களிலும் ஸ்டாலின் தான் ஜெயித்தார். 2011ஆம் ஆண்டு முதல் கொளத்தூரில் நடந்த முதல் தேர்தலில் அதிமுகவின் சைதை துரைசாமியை 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்கடித்தார்.

2016ம் ஆண்டு அதிமுகவின் ஜே.சி.டி பிரபாகரனை எதிர்த்து போட்டியிட்டு, சுமார் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 2021 கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமைக் விடவும் சுமார் 70,384 வாக்குகள் கூடுதலாகப் பெற்று, தனது செல்வாக்கை நிரூபித்தார்.இந்நிலையிலேயே தற்போது தோல்வியடைந்துள்ளார்.

இறுதி சுற்றின் முடிவில் தவெக விஎஸ் பாபு 80407 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்டாலின் 72321 வாக்குகள் பெற்றார். 8,086 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி விஎஸ் பாபு வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும் துணை முதலமைச்சருமான திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டுப்பணத்தை இழந்து தோல்வி அடைந்துள்ளார். தவெக வேட்பாளர் பிரபுவிடம் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சீமான் தோல்வி அடைந்துள்ளார். சீமான் மொத்தமாகவே 17,926 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலரும் தமிழக எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button