கொழும்பில் கம்பன் விழா 2026 கோலாகலமாக ஆரம்பம்

கொழும்பில் அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழா 2026 ஆரம்பமாகியது.
இந்த விழா, கொழும்பு நகரில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் இன்று 30 ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழா தினமும் காலை 9.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு இரண்டு அமர்வுகளாக நடைபெறு கிறது.
தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தைப் பெறும் கம்பர் அவர்களின் கம்பராமாயணத்தை மையமாகக் கொண்டு இவ்விழாவில் பல்வேறு இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வின் போது கம்பன் திருவுருவப்பட ஊர்வலம் ஸ்ரீ ஐஸ்வர்யலக்ஷ்மி தத்துவத் திருக்கோவிலிலிருந்து ஆரம்பமானது.

‘இசைவேந்தன்’ ம. தயாபரன் தலைமையுரையினை நிகழ்த்த,தொடக்கவுரையினை கணேஷ் தெய்வநாயகம் வழங்கினார்.
கம்பன் கழக தலைவர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராமகாதை” வசன நடை (பகுதி 1)நூலாசிரியர்: ‘கம்பவாரிதி’ இலங்கை ஜெயராஜின் நூலின் முதற்பிரதியினை ‘ இலக்கியப்புரவலர்’ அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களுக்கு , தமிழ்நாடு கோவிலூர் மடாதிபதி நாராயண சுவாமி வழங்கிவைத்தார்.
பிரதம விருந்தினராக மலேசியா நாட்டின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ’ டாக்டர் எம். சரவணன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்க, ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் செயலாளர் மரியம் ஹாசிம், ஈஸ்வரன் brothers பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் (தமிழ்நாடு) ‘தாரணிக் கொடையாளன் கம்பன்” என்னும் தலைப்பில் உறையாற்றினார்
நாட்டிய அரங்கு ‘இராம காதை’ கம்பராமாயணப் பாடல்கள் பாராயணம், அறிஞர்களின் உரைகள் இடம்பெற்றன.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய பாரம்பரியத்தைப் பேணவும், இளைஞர்களிடையே இலக்கிய ஆர்வத்தை வளர்க்கவும் இவ்விழா முக்கிய பங்காற்றும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வானிலை,ஆய்வு,தமிழ்,இசை,இளைஞர் துறைகளுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![]()