இலங்கை

என்.பி.பி. அரசு வீட்டுக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது!- சாகர காரியவசம் தெரிவிப்பு!

“நிதி மோசடிகளில் ஈடுபட்டு வரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, ஒட்டுமொத்தமாகக் கலைந்து வீட்டுக்குச் செல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய அரசு பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த அரசு மக்களின் நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றது.

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விரைவில் இந்த அரசு பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்.

மக்களின் பலத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் பலமான முறையில் ஆட்சியமைப்பது உறுதி.” என தெரவித்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button