தமிழக சட்டசபைத் தேர்தல்! தமிழக வெற்றிக்கழகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

தமிழக சட்டசபைத் தேர்த்ல் உலகளாவிய ரீதியில் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என கொழும்பு மாநகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் கே.ரி குருசுவாமி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, விஜயின் வருகையை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மே மாதம் (4) ஆம் திகதி தான் தமிழக சட்டசபைத் தேர்தலுக்குரிய முடிவுகள் வெளியாகும்.
ஆனால் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் வருகை என்பது தமிழக மக்களிடையே, இளைஞர்களிடையே அல்லது பழைமை வாய்ந்த கட்சிகளிடையே ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஏதாவது ஒரு வகையிலே தமிழக சட்டசபையிலே உறுப்பினராகவாவது அவர் வந்து அவரது எதிர்காலத்திட்டங்கள் , இளைஞர்களது எதிர்காலத்தை நல்வழிப்படுத்துவதாக இருந்தால் அதனை நாம் வரவேற்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()