இலங்கை

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவரையும் சொந்த பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள அருச்சுனா இராமநாதன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரு வைத்தியர்களும் தமது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து இரு வைத்தியர்களையும் சொந்த பிணையில் செல்வதற்கு மன்று அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *