இந்தியா

தமிழக தேர்தல் திருவிழா இன்று – விஜய்யின் த.வெ.க சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது..

மக்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

காவல்துறை பாதுகாப்பு

மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ள நிலையில், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே மாறி மாறி ஆட்சி மாற்றம் நிகழும் இருமுனைத் தேர்தல் கட்டமைப்புக்காக நீண்ட காலமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இம்முறை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க எனப் பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தீவிர அரசியலில் நுழைந்திருப்பது, 2026 தேர்தலுக்கு ஒரு புதிய மற்றும் கணிக்க இயலாத பரிமாணத்தைச் சேர்த்துள்ளது.

குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, பாரம்பரிய கட்சிகளின் சித்தாந்தங்களுடன் வலுவாக இணைந்திருக்காத ஒரு புதிய வாக்காளர் தளத்தை உருவாக்குகிறது.

எனினும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறைந்தபட்சம் 8 முதல் 10 சதவிகிதம் வரையிலான வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் ஊடகம் உன்றுக்கு கருத்து தெரிவித்த போது குறிப்பிட்டுள்ளார்

மே 4 ஆம் திகதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

யாழ்ப்பாணத்தில் பதாகைகள்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் (Banners) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக தேர்தல் திருவிழா இன்று - விஜய்யின் த.வெ.க சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் | Holiday For Tamil Nadu Election 2026 Live Updates

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களான யாழ். பொது நூலகம் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆளுங்கட்சியான திமுக ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தேர்தல் பரப்புரை பதாகைகளும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *