இலங்கை

காலி துறைமுகத்தை வந்தடைந்த ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல்

ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக  சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது.

பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும் 315 பணியாளர்களையும் சுமந்து வந்துள்ளது.அவர்களில் பெரும்பான்மையான சுற்றுலாப் பயணிகள் ஜெர்மானிய நாட்டவர்கள் ஆவர்.

2025 டிசம்பரில் ஜெர்மனியில் தொடங்கிய 146 நாள் உலகப் பயணத்தில் இந்தக் கப்பல் தற்போது உள்ளது.

193 மீட்டர் நீளமும் எட்டு தளங்களும் கொண்ட இந்தக் கப்பலின் அனைத்து அறைகளும் (cabins) கடல் பார்வையுடன் உள்ளது.சில அறைகளில் தனிப்பட்ட balcony உள்ளது, உணவகங்கள், கஃபே, பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன,

சிறிய அளவானதால் பெரிய கப்பல்கள் செல்ல முடியாத துறைமுகங்களுக்கும் செல்ல முடியும். இது ஒரு முதன்மை சொகுசுக் கப்பல் என்ற அதன் நற்பெயரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தங்கியுள்ள காலத்தில் காலி- கோட்டை, ஹிக்கடுவ, ருமசல, கொக்கலை மற்றும் அஹங்கம ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *