உலகம்

லண்டன் மாநகர கௌரவத்தை கைவிட இளவரசர் ஆண்ட்ரூவிற்கு அழைப்பு

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்பு மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களில் சிக்கியுள்ள முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவிற்கு (Andrew Mountbatten-Windsor) லண்டன் மாநகராட்சி புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2012-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ‘லண்டன் நகர சுதந்திரம்’ என்ற கௌரவப் பட்டத்தை தாமாக முன்வந்து கைவிடுமாறு கவுன்சிலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சட்டப்படி இந்தப் பட்டத்தைப் பறிக்க வழியில்லாத நிலையில், அவராகவே இதனைத் துறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘யார்க்’ (York) நகர கௌரவப் பட்டம் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது லண்டனிலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரச பதவிகள் பறிக்கப்பட்ட ஆண்ட்ரூ, தற்போது சான்ட்ரிங்ஹாம் (Sandringham) மாளிகையில் தனிமையில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே, அவரை வாரிசு உரிமைப் பட்டியலில் இருந்து நீக்க கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *