உலகம்

நிரந்தர சமாதானமில்லை போர் மீண்டும் வெடிக்கும்; அமெரிக்க ஜெனரல் டான் கெய்ன் எச்சரிக்கை

தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கையானது போரில் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே என அமெரிக்க கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் (Chairman of the Joint Chiefs of Staff) ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத்துடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு உத்தரவிடப்பட்டாலோ அல்லது அதற்கான தேவை ஏற்பட்டாலோ, அமெரிக்காவின் கூட்டுப் படை அதனை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள போர் நிறுத்தம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதை ஜெனரல் கெய்னின் கருத்துக்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

ஒருவேளை சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில், மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.

இராணுவ ரீதியாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும், மேலதிக உத்தரவுகளுக்கு அமைய செயற்படவும் அமெரிக்கப் படைகள் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *