உலகம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ; அல் ஜசீரா ஊடகவியலாளர் முகமது விஷா பலி

காசாவில் இஸ்ரேலியப் படைகள் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில், அல் ஜசீரா (Al Jazeera Mubasher) நிறுவனத்தின் ஊடகவியலாளர் முகமது விஷா (Mohammed Wishah) கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு காசா நகரில் (Western Gaza City) இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தி (Drone) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவர் இலக்கு வைக்கப்பட்டதாக மருத்துவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த தகவல்களை விரைவில் வழங்குவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *