உலகம்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர தயார் ; களத்தில் குதிக்க தயாராகும் ரஷ்யா

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிராந்தியத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

தேவைப்படும் பட்சத்தில் இராணுவச் சூழலை அமைதிப் பாதைக்கு மாற்ற ரஷ்யா உதவும்.

ஈரான் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை மற்றும் நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து அவர் பரிசீலித்து வரும் கருத்துக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பெஸ்கோவ், நேட்டோவை ஒரு ‘பகைமை வாய்ந்த கூட்டணி’ என்றே ரஷ்யா கருதுவதாகக் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *