உலகம்

ஹோர்முஸ் ஊடாக பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம்!; ஈரானின் திட்டத்திற்கு அங்கீகாரம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு ஈரான் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இத்திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் இந்த நீரிணை ஊடாக பயணிப்பது தடை செய்யப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலதிகமாக, ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய நாடுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமானுடன் இணைந்து ஈரான் இந்த புதிய கட்டண முறையை அமுல்படுத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 20% பொதுவாக ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையில் அமைந்துள்ள இந்த முக்கியமான கடல்வழிப் பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது.

இருப்பினும், கடல்சார் புலனாய்வு நிறுவனமான Kpler இன் கூற்றுப்படி, போர் தொடங்கியதில் இருந்து இந்த பாதை ஊடாக நடைபெறும் போக்குவரத்து சுமார் 95% வீழ்ச்சியடைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *