இலங்கை

புதிய சிக்கலில் பிள்ளையான்! சானி அபேசேகரவால் நிம்மதி இழந்த சுரேஷ் சலே

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம்  ரத்து செய்துள்ளது.

அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த விடயத்தில் பிள்ளையான் தொடர்பு பட்டுள்ளார், அவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் சட்டத்தரணி மதிசுதன் தெரிவித்துள்ளார்.

மித்தெனிய ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மனம்பேரி அரச தரப்பு சாட்சியாக முன்னர் மாறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேவை எதிர்வரும் 22ஆம் திகதியன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *