உலகம்

ட்ரம்பின் சீன விஜயம் ஒத்திவைப்பு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ சீன விஜயம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் ஏப்ரல் 2 வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த விஜயம், தற்போது மே மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு (Tariffs) விவகாரங்கள் குறித்து சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் நேரடியாகக் கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.

இது ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலாவது சீனா விஜயமாகும். இதற்கு முன்னர் அவர் 2017 ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *