உலகம்

அமெரிக்கா எங்களை தாக்கினால் இந்தியாவை தாக்குவோம் – பாகிஸ்தான் எச்சரிக்கை

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் பேசுகையில், “பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், எந்த யோசனையும் இல்லாமல், நாங்கள் மும்பை மற்றும் தில்லியை தாக்குவோம்.

அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம் இதற்கு சாத்தியமில்லையெனினும், எங்களை யாராவது தாக்கும் நோக்கில் பார்த்தால், பாகிஸ்தான் விரும்பும் இடத்தில் (இந்தியா) தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அப்துல் பாசித் 2014 முதல் 2017 வரையில் பாகிஸ்தானின் உயர் ஆணையராக டில்லியில் பணியாற்றினார்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் அப்துல் பாசித்தின் இந்தக் கருத்துகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *