உலகம்

ஈரானை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டதா!- கனடிய இராணுவ நிபுணர் எச்சரிக்கை

ஈரானின் இராணுவ வியூகங்களை அமெரிக்கா முழுமையாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளதாக கனடிய இராணுவ ஆய்வாளரும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் நேட்டோ தளபதியுமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டேவிட் பிரேஸர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் இரண்டு வாரங்களைக் கடந்துள்ளது.

ஈரானின் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்தும் ஏவுகணைகள் அதிநவீனமானவை என்றாலும், அவை மிகவும் விலை உயர்ந்தவை என டேவிட் பிரேஸர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தற்போது ஒரு பொருளாதாரப் போராக மாறியுள்ளது. ஈரானின் வெறும் 60,000 டொலர் பெறுமதியான ட்ரோன் (Drone) ஒன்றைச் சுட்டு வீழ்த்துவதற்கு, அமெரிக்கா செலவிடும் ஏவுகணையின் விலை விகிதம் 163-க்கு 1 என்ற அளவில் உள்ளது.

இது பாதுகாப்பிற்குச் சிறந்தது என்றாலும், பொருளாதார ரீதியாக ஒரு திறமையான அணுகுமுறை அல்ல. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானுக்குள் இதுவரை 15,000 இலக்குகளைத் தாக்கியுள்ளன.

ஈரான் பலவீனமடைந்திருந்தாலும், அவர்கள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்றும், உக்ரைன் ரஷ்யாவை எதிர்கொள்வது போன்றதொரு நீண்டகால வியூகத்தை ஈரான் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *