உலகம்

ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கலாம் ; இஸ்ரேல் அமைச்சர் எச்சரிக்கை

ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்க வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேலிய அமைச்சர் மிகி ஷொஹார் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் நிலைமை மேலும் பதற்றமடையக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக இஸ்ரேல் மக்கள் அனைவரும் அவசர நிலைமைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்து உலக நாடுகளும் கவலை வெளியிட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *