உலகம்

இந்தியாவில் கடும் எரிவாயு நெருக்கடி – எஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது

இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் நாடு முழுவதும் எஸ்மா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. குறித்த பகுதியின் ஊடாகவே உலக அளவில் 20 வீதமான எரிபொருள் மற்றும் எரிவாயு கொண்டுச் செல்லப்படுகின்றன.

இந்தியாவிற்கு 80 தொடக்கம் 90 வீதமான சமையல் எரிவாயு ஹார்முஸ் நீரிணையை வழியாகவே கொண்டுவரப்படுகின்றன.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவிற்கான எரிவாயு விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள உணவகங்கள் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சமையல் எரிவாயு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சமையல் எரிவாயு முன்பதிவிற்கு 21 நாட்கள் முதல் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிக பயன்பாட்டுக்கு எரிவாயு விநியோகம் செய்வதை விடுத்து வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் கியாஸ் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு Essential Commodities Act (EC ACT) எனும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை இன்று நடைமுறைப்படுத்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தை மீறினால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் கூடுதலாக ஓராண்டு வரை சிறை தண்டனையை நீட்டிப்பு செய்ய முடியும்.

மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறினால் சம்பந்தப்பட்ட தொழிலை முடிக்க முடியும். இது ‘எஸ்மா’ சட்டத்தின் ஒருபகுதியாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *