பலதும் பத்தும்

பூனைக்கு சாப்பாடு ஊட்டியே ரூ.72 லட்சம் சம்பாதித்த இளைஞன்

சீனப் புத்தாண்டு மற்றும் வசந்த விழா காலங்களில் செல்லப்பிராணி பராமரிப்பு சேவை செய்து ஒரு நபர் இலங்கை பணத்தில் 72 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார்.

பூனை பராமரிப்பு

சீனாவில் புத்தாண்டு காலங்கள் மற்றும் வசந்த விழா காலங்களில் வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கான தேவை உருவாகியுள்ளது, ஏனெனில் கொண்டாட்டங்களுக்காக வெளியூர் பயணிக்கும் மக்கள் தங்களுடன் செல்லப்பிராணிகளை அழைத்து செல்வது கடினம்.

இதையே வருமானமாக மாற்ற முயன்ற இளைஞர் ஒருவர், உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளத் தொடங்கினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பூனைகளுக்கு வீடு வீடாக உணவு வழங்கும் சேவையில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆண்டு வசந்த விழாவின் போது, ஹுவான் மற்றும் அவரது நான்கு பேர் கொண்ட குழு, பயணிகள் வெளியே செல்லும் போது அவர்களது செல்லப்பிராணிகளை பராமரித்து 160,000 யுவான் அதாவது இலங்கை பணம் (சுமார் ரூ. 72 லட்சத்தை ) வருமானமாக ஈட்டியுள்ளனர்.

திருவிழாவிற்காக 20 நாட்கள் முன்பும் பின்னும், அவர்கள் 2,000 வீடுகளில் சேவை செய்யும் வழக்கத்தை வைத்துள்ளனர். இதில் ஹுவான் தனிப்பட்ட முறையில் 1,000 செல்லபிராணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டார்.

இவை ஒவ்வொரு சுமார் 10,15 நிமிடம் ஆகும். இந்த நேரத்தில் செல்லபிராணிகளுக்கு குப்பை பெட்டியை சுத்தம் செய்தல், உணவு மற்றும் தண்ணீர் நிரப்புதல், பூனையின் ஆரோக்கியம் பரிசோதனை, ஜன்னல்கள் மற்றும் மின்சாதனங்களைச் சரிபார்த்தல், குப்பைகளை வெளியே எடுப்பது போன்ற பணிகள் செய்வாராம்.

தேவையானால், அவற்றுடன் சேர்த்து கூடுதல் கட்டணம் இல்லாமல் மருந்து வழங்குதல் மற்றும் நகங்களை வெட்டுதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.

ஹுவான் பண்டிகைக் காலங்களில் அதிகாலை 3 மணிக்கு வேலை தொடங்கி இரவு 10, 11 மணிவரை பரபரப்பாக வேலை செய்வாராம். சராசரியாக ஒரு நாளில் 3, 4 மணி தூக்கம் மட்டுமே இவருக்கு கிடைக்கிறது.

பண்டிகைக்காலங்களில் இந்த சேவைக்கு அதிக டிமாண்ட் என்பதால் ஹுவான் ஒரு நாளில் 55 ஆர்டர்களை முடிப்பார். அவர் சேவையை தொடர்ந்து செய்வதால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இவரிடம் வருகின்றனர்.

தற்போது செல்லப்பிராணி பராமரிப்பு சேவைகளுக்கான அதிகரிப்பு தேவை அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக முக்கிய பண்டிகைகளில் குடும்பங்கள் வெளியே செல்லும் போது இந்த சேவை முக்கியம் பெறுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *