உலகம்

மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் ; போர் சூழலில் ட்ரம்பை எதிர்க்கும் ஐரோப்பிய நாடு

அமெரிக்காவின் வர்த்தக மிரட்டலுக்கு பயந்து எங்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, ஸ்பெயினில் உள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த அமெரிக்காவிற்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம்” என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், “ஈரான் போர் என்பது லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடுவது ஆபத்தானது.

வெறும் வர்த்தகப் பழிவாங்கல்களுக்கு பயந்து, உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம். இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *