விண்வெளியில் காபி குடிக்க முடியுமா?-நாசா உருவாக்கிய அதிசய கோப்பை !

பூமியில் நாம் காபி அல்லது தண்ணீர் குடிப்பதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.
ஒரு கோப்பை சரிந்து திரவம் கீழே சிந்துவது ஈர்ப்பு விசையின் இயல்பு.
ஆனால், ஈர்ப்பு விசை இல்லாத பூஜ்ஜிய ஈர்ப்பு (microgravity) சூழலில் இது சாத்தியமில்லை.
இதற்கான தீர்வாக நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட் உருவாக்கி கேபிலரி கோப்பை என்பது, பூஜ்ஜிய ஈர்ப்பு சூழலில் பயன்படுத்தப்படும் திறந்த குடிநீர் கோப்பை ஆகும்.
திரவங்கள் இயல்பாக சிந்தாமல் தந்துகி இயக்க கொள்கையை பயன்படுத்தி இந்த கோப்பை பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் எளிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த வடிவமைப்பு பின்னர் 3D அச்சிடப்பட்ட வடிவமாக உருவாக்கப்பட்டு நாசாவால் சோதிக்கப்பட்டது.
தற்போது இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் விண்வெளியில் காப்புரிமை பெற்ற முதல் தயாரிப்பாக கருதப்படுகிறது
இந்த கண்டுபிடிப்பு விண்வெளியில் வாழ்வாதாரத்தை மனிதர்களுக்கு இயல்பாக மாற்றுகிறது
இந்த கோப்பையின் மூலம் விண்வெளி வீரர்கள், பூமியில் இருப்பது போல திறந்த கோப்பையிலிருந்து குடிக்கவும், கூடவே “டோஸ்ட்” செய்யவும் முடிகிறது.
கேபிலரி கோப்பை, வடிவமைப்பு, அறிவியல் மற்றும் பொறியியல் இணைந்தால் எவ்வாறு அன்றாட வாழ்க்கை அனுபவங்களையே விண்வெளிக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை காட்டும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
![]()