இலங்கை

வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிச் சிங்களத்தால் ரவி எம்.பி .சீற்றம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டதரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரினார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ் மொழிமூலமான மொழிபெயர்ப்புக்களுடன் சீராக கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *