உலகம்

பிரித்தானியாவில் இடைத்தேர்தல்; பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிற்கு சோதனை காலம்!

பிரித்தானியாவில் கோர்டன் (Gorton) மற்றும் டென்டன் (Denton) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  (பெப்ரவரி 26) நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு ஒரு முக்கிய அரசியல் சோதனையாகக் இந்த தேர்தல் கருதப்படுகின்றது.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் தொழிற் கட்சிக்கும் (Labour Party), வலதுசாரி கொள்கை உடைய சீர்திருத்தக் கட்சிக்கும் (Reform UK) மற்றும் பசுமைக் கட்சிக்கும் (Greens) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பிறகு சந்திக்கும் மிக முக்கிய சவாலாக இந்தத் தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பில் ஆளும் கட்சி மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ததாக பார்க்கப்படுகின்றது.

பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு,   அதிகாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் பிரித்தானியாவின் எதிர்கால அரசியல் நகர்வுகளிலும், பிரதமர் ஸ்டார்மரின் செல்வாக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *