முச்சந்தி

செச்னியாவில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் வாழும் குஜ்ஜார்கள்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இந்தியாவிலுள்ள குஜ்ஜார் (gujjar) சமூகம் பூர்வீக இந்தியர்கள் அல்ல. அவர்களின் மூதாதையர்கள் ரஷ்யாவின் செச்னியா மற்றும் ஜார்ஜியா பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)
பலரும் மறந்து விட்ட குஜ்ஜார் இன மக்களை பற்றிய ஒரு பார்வையே இந்த ஆக்கமாகும். ராஜஸ்தானில் தொடங்கி டெல்லி வரை வியாபித்து பரபரப்பை ஏற்படுத்திய குஜ்ஜார் சமுதாயத்தினர், 2007இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்ற அந்தஸ்தை தங்களுக்குத் தர வேண்டும் என்ற குஜ்ஜார்களின் ஒரே கோரிக்கையாக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. குஜ்ஜார்களின் போராட்டம் இந்தியாவையே சிலகாலம் பரபரப்பில் ஆழ்த்தியது.
இந்தியாவிலுள்ள குஜ்ஜார் (gujjar) சமூகம் பூர்வீக இந்தியர்கள் அல்ல. அவர்களின் மூதாதையர்கள் ரஷ்யாவின் செச்னியா (Chechnya) மற்றும் ஜார்ஜியா (Georgia) பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காக்கேசியன் மலைத்தொடர் பகுதியைச் சேர்ந்த இவர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து இந்திய துணைக்கண்டத்தில் குடியேறினர்.
செச்னிய குஜ்ஜார்கள்:
அவர்கள் காக்கேசியன் மலைத்தொடரிலிருந்து மத்திய ஆசியா வழியாக இந்தியாவுக்கு வந்தனர். குஜ்ஜார்கள் மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சமூகமாகக் கருதப்படுகிறார்கள், இவர்கள் நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர். இந்த சமூகம் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பரவி வாழ்ந்து வருகின்றனர்.
குஜ்ஜார் (Gurjar) இன மக்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் தற்போது வசிக்கின்றனர். இவர்களை குஜ்ஜார், குஜாரா, குஜுர், வீர் குர்ஜார் மற்றும் குஜார் என்றும் அழைப்பர். இவர்களின் முக்கியத் தொழில் கால்நடைகளை மேய்ப்பதே. குஜ்ஜார்கள் இந்தியாவின் பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் பரவி வாழ்கின்றனர்.
குஜ்ஜார் இன மக்கள் சொந்தமாக ‘குஜாரி’ (Gujari) என்ற மொழியைப் பேசுகிறார்கள், இது ராஜஸ்தானி மற்றும் மார்வாரியுடன் தொடர்புடையது.
குஜ்ஜர்கள் இந்து, சீக்கியம் மற்றும் இசுலாமிய சமயங்களைப் பின்பற்றுகிறார்கள். இவர்கள் சத்ரியர்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டனர். இவர்கள் 1857இல் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்திய மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தில் இவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
குஜ்ஜர்கள், கிபி ஏழாம் நூற்றாண்டில் கூர்ஜர-பிரதிகார்ப் பேரரசை நிறுவி, தற்கால குஜராத், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலப் பகுதிகளை கிபி 650 முதல் 1036 முடிய ஆண்டனர். தற்காலத்தில் குஜ்ஜர்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி மக்களாக வாழ்கின்றனர்.
இந்திய பூர்வீக குடிகள் அல்ல:
2007ம் ஆண்டுகளில் இந்தியாவையே கலக்கி எடுத்த குஜ்ஜார்கள் இந்திய பூர்வீக குடிகள் அல்ல என்ற தகவல் நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது. அவர்களின் பூர்வீகம் ரஷ்யாவின் செச்னியா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசான ஜார்ஜியாவிலிருந்து தொடங்குகிறது.
ராஜஸ்தானில் தொடங்கி டெல்லி வரை வியாபித்து பரபரப்பை ஏற்படுத்திய குஜ்ஜார் சமுதாயத்தினர், 2007இல் தாழத்தப்பட்ட சமூகத்தினர் என்ற அந்தஸ்தை தங்களுக்குத் தர வேண்டும் என்பதே குஜ்ஜார்களின் ஒரே கோரிக்கை. குஜ்ஜார்களின் போராட்டம் இந்தியாவையே சிலகாலம் பரபரப்பில் ஆழ்த்தியது.
குஜ்ஜார்கள் யார் என்பதை அறிய 1500 ஆண்டுகளுக்கு முன்னான வரலாற்றை அறிய வேண்டும். ரஷ்யாவின் பிரதேசமான செச்னியா தான் குஜ்ஜார்களின் பூர்வீகம் புதைந்து கிடக்கிறது. இங்கிருந்தும், அருகாமையில் உள்ள ஜோர்ஜியாவிலிருந்தும் குஜ்ஜார்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து வந்தனர். குர்ஜார், குர்ஜாரா, குஜார், கூஜார் என பல்வேறு பெயர்களில் குஜ்ஜார்கள் அழைக்கப்படுகின்றனர். ஹூனர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த காலகட்டமான நான்கு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் குஜ்ஜார்களும் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.
அதேவேளை இவர்களின் ஆதி பூர்வீகம், கஸாக் பழங்குடியினம் என்ற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில்தான் தங்களை பழங்குடியினர் என்று கூறுகின்றனர் குஜ்ஜார்கள். ஜோர்ஜியாவுக்கு அக்காலத்தில் குஜாரிஸ்தான் என்ற பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. குஜ்ஜார்கள் நிறைந்திருந்த காரணத்தால்தான் அந்தப் பெயர் . சில வரலாற்று ஆவணங்களின்படி, குஜ்ஜார்கள் செளராஷ்டிரப் பகுதியில் பெரும் மன்னர்களாகவும், நிலக்கிழார்களாகவும் இருந்துள்ளனர்.
பின்னர் வட இந்தியாவுக்கு அவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்த குஜ்ஜார்கள், பின்னர் ஷத்திரிய வர்ணா என்ற ஜாதி அடையாளத்திற்குள் கரைந்து போயுள்ளனர். குஜ்ஜார்களில் ஒரு பிரிவினர் தங்களை பிராமணர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தின் மீத முஹம்மதியர்கள் படையெடுத்து வந்தபோது, குஜ்ஜார் இந்துக்கள் பலர் முஸ்லீம்களாக மாறியுள்ளனர்.
இப்போதுள்ள குஜ்ஜார்கள், இந்தோ- ஆரிய காலத்திற்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட திருமண பந்தத்தால் ஏற்பட்ட கலப்புறவில் உருவான வம்சாவளியினர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 18ம் நூற்றாண்டில், குஜ்ஜார்கள் குறு நில மன்னர்களாக இருந்துள்ளனர். பலர் ஜமீன்தாரர்ளாகவும் இருந்துள்ளனர். மீரட் மாவட்டத்தில் உள்ள பர்லசாட்கர் என்ற இடத்தில் உள்ள கோட்டையை, குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த ராஜா நயன் சிங் என்பவர் கட்டியதாக ஆவணங்கள் உள்ளன. குஜ்ஜார்களின் வரலாறு பல அரிய தகவல்களைக் கொண்ட மக்களாவர்கள்.
பெரும் வரலாற்று சமாச்சாரம். ஆனால் இன்றோ தங்களது அடையாளத்திற்காக குஜ்ஜார்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை காலத்தின் கோலம் என்றுதான் கூற வேண்டும்.
இட ஒதுக்கீடு போராட்டம்:
குஜ்ஜார் (Gurjar) சமூகம் பழமையான கால்நடை மேய்ப்பாளர்கள் மற்றும் விவசாய இன மக்கள் ஆவர். இந்து, சீக்கியம் மற்றும் இஸ்லாமிய சமயங்களைப் பின்பற்றும் இவர்கள், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடி வந்தனர்.
2007இல் இராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் தங்களை பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜூன் 2007இல் ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த குஜ்ஜார் சமூகத்தினர், மக்கள் தொகை 8 சதவீதம் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி தொடங்கிய போராட்டம் – வன்முறையாக வெடித்து 27 உயிர்களைப் பலிவாங்கியது.
குஜ்ஜார் சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பிரச்சனை மிகவும் சிக்கலானதற்குக் காரணம், ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததுதான்.
சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜாட்’ சமூகத்தினர் (12 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து – கல்வி, வேலை வாய்ப்புகளில், குஜ்ஜார் சமூகத்தினரின் வாய்ப்புகள் மோசமாகக் குறைந்துவிட்டன. பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, குஜ்ஜார் சமூகத்தினரைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதாக வாக்குறுதி தந்திருந்தது.
ஆனால், பழங்குடியினர் பட்டியலில் ஒரு சமூகத்தினரை சேர்க்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசுக்கு இல்லை. இதற்கிடையே ராஜஸ்தானில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ‘மீனாஸ்’ சமூத்தினர், குஜ்ஜார்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பிரச்சினை மேலும் சிக்கலாகிவிட்டது என்பதும் உண்மையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *