யாழ்.பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நிறைவு; 3252 பேருக்கு பட்டங்கள், சான்றிதழ்கள் வழங்கல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் நிறைவுநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்று அமர்வுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று மாலையுடன் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை(19 ) காலை பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் தலைமையில் விமரிசையாக ஆரம்பமானது.
இந் நிலையில் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக 12 அமர்வுகளாக பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இவ் வருடம் பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 3252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் விரைவில் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அவர் துணைவேந்தராக முன்னின்று நடாத்தும் இறுதிப் பட்டமளிப்பு விழா இதுவென்பதுவும் குறிப்பிடத்தக்கது.
![]()