முச்சந்தி
ஆப்கானில் உலகின் மிகப்பெரிய ஆயுத சந்தை: அமெரிக்கா ஆயுதங்கள் பலூசிஸ்தானில்…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஆப்கானிஸ்தான் இப்போது உலகின் மிகப்பெரிய ஆயுத சந்தையாக மாறியுள்ளது. தீவிரவாத குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடமாக இருப்பதாக இஸ்லாமாபாத் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது, இதை தலிபான் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தலிபான்களிடம் ஆயுதங்களைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார்)பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்களின்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட M-16 கள் மற்றும் M-4 கார்பைன் போன்ற ஆயுதங்கள் தனிநாடு கோரும் போராட்டக் குழுவான பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தின் (BLA) கைகளில் சிக்கியுள்ளன. எவ்வாறு அவர்களின் வசம் இந்த ஆயுதங்கள் சிக்கின என்பது குறித்து பல மர்மமான உண்மைகள் வெளியாகியுள்ளன.

பல தசாப்தங்களாக, BLA ஒரு தனிநாடு கோரும் பிரிவினைவாத போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த விடுதலை அமைப்பு மூலோபாய ரீதியாக முக்கியமான மற்றும் கனிம வளம் மிக்க பலூசிஸ்தான் பிராந்தியத்தில் அதிக அரசியல் சுயாட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை நாடுகிறது. அங்கு ரெக்கோ டிக் சுரங்கம் மற்றும் பிற செப்பு மற்றும் கனிம இருப்புக்கள் அமைந்துள்ளன.

பாகிஸ்தான் நாட்டு இராணுவம் மீது 26/1/26 வார இறுதியில் BLA போராளிகள் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர். இதன் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் 33 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் விளைவாக மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் அமெரிக்காவின் கனிமக் கொள்கையின் சாத்தியக்கூறுகள் குறித்த பல கவலைகளை ஆழப்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் படைகளால் குறைந்தது 133 பலூச் போராளிகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.
பலூச் மாகாணத்தின் முதலமைச்சர் சர்பராஸ் புக்டி, பல ஆப்கானிய நாட்டவர்கள் பலூச் போராளிகளுடன் (BLA) தொடர்பு கொண்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் சுட்டிக்காட்டின என்றும், பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார்.
பலூசிஸ்தான் கனிமவளம்:
பலூசிஸ்தான் முக்கியமான கனிம வளங்களை கொண்டுள்ளது. ஆனால் போராளிகளின் அச்சுறுத்தல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
2001 செப்ரம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து காபூலில் இருந்து தலிபான்களை அமெரிக்கா வெளியேற்றியது. அதன் பிறகு ஒரு புதிய ஆப்கானிய இராணுவத்திற்கு அமெரிக்க படைகள் பயிற்சி அளித்தது. மேலும் புதிதாக நிறுவப்பட்ட ஆப்கான் அரசு தலிபான்களை முழுமையாக அழிக்க உதவும் என்று நம்பும் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அதற்கு வழங்கியது.
ஆனால் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பயிற்சி பெற்ற படைகளின் சரிவைத் தொடர்ந்து, தலிபான்கள் காபூலை மீண்டும் 2021இல் கைப்பற்றின. இதையடுத்து ஆகஸ்ட் 2021 இல் அமெரிக்க துருப்புக்களும் பணியாளர்களும் பின்வாங்கிய நிலையில், அவர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள விட்டுச் சென்றனர்.
சுமார் 300,000 சிறிய ஆயுத அமெரிக்க ஆயுதங்களை அமெரிக்க படைகள் கைவிட்டு சென்றன.
அமெரிக்காவின் $148 பில்லியன் மதிப்புள்ள ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பு திட்டத்திற்கான சிறப்பு ஆய்வாளர் ஜெனரலாக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய ஜான் சோப்கோ அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
முக்கியமாக தொடர்புசாதன பொருட்கள், ராக்கெட் ஏவுகணைகள், கையெறி ஏவுகணைகள், மோட்டார்கள், பீரங்கிகள், கனரக இயந்திர துப்பாக்கிகள், கண்காணிப்பு உபகரணங்கள், இரவு பார்வை உபகரணங்கள்” உள்ளிட்ட மின்னணுப் பொருட்களும் கைவிட்டு சென்றனர்.
இதுவே ஆப்கானிஸ்தான் இப்போது உலகின் மிகப்பெரிய ஆயுதக் கடையாக மாறியுள்ளது. தீவிரவாத குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடமாக இருப்பதாக இஸ்லாமாபாத் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது, இதை தலிபான் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தலிபான்களிடம் ஆயுதங்களைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார். அமெரிக்கா விலகியதை தொடர்ந்து எஞ்சியிருக்கும் அனைத்து ஆயுதங்களும் அதன் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆனாலும் எல்லாவகை ஆயுதங்களும் இப்பகுதியில் எவ்வளவு பரவலாகக் கிடைக்கின்றன என கூறப்படுகிறது. பாகிஸ்தான், ஈரான் மற்றும் சீனா உட்பட ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளும் இதனால் கவலைப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் தாலிபானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடம் இருந்து அமெரிக்க ஆயுதங்களைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதி டிரம்ப் கோரியிருந்தாரும், ஆனால் எந்தப் பலனும் இல்லை. அந்த ஆயுதங்களை மீட்டெடுக்க ஆப்கானிஸ்தான் தாலிபானுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதுடன், அமெரிக்க பென்டகன் பலூச் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளது.
பலூசிஸ்தான் தனிநாட்டு போராட்டம் :
1947ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் இந்தியாவை பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது. ஆனால் உண்மையில் அது வங்காளம், பஞ்சாப், சிந்தி, பலூச்சி, பக்தூன் என ஐந்து தேசிய தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் போராடி 1971ல் வங்காள தேசமாக மலர்ந்தது.
இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எதுவாயிருந்தாலும் பாகிஸ்தானில் கோலோச்சுவது பஞ்சாபி முஸ்லீம்களும் சிந்தி முஸ்லீம்களுமே. இவர்கள் பலூச்சிகளையும் பக்தூனியர்களையும் (பத்தானியர்கள்) நீண்ட காலமாக ஒடுக்கி வருகின்றனர். அதனை எதிர்த்துப் பாகிஸ்தானில் அவ்விரு இனங்களும் விடுதலை கோரிப் போராடி வருகின்றன.
பொருளாதார ரீதியாக, மற்ற பாகிஸ்தானியர்களுடன் ஒப்பிடும் போது பலூச்சிகள் தனிநபர் வருமானம் மிகக் குறைவு. கட்டமைப்பு ரீதியான பொருளாதாரச் சுரண்டல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) இருந்து பெரும்பாலான பலூச் சமூகத்தை விலக்கியது மற்றும் பிற பொருளாதாரத் திட்டங்களில் இருந்து அந்நியப்படுத்துதல் ஆகியவை பலூச் மக்களை போராட்ட வழியில் செயல்படத் தூண்டின.பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில், BLA அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க
அரசு அறிவித்தது. அதே மாதத்தில், அமெரிக்கப் படைகள் தங்கள் பாகிஸ்தான் சகாக்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை நடத்தி, பலூச் BLA அமைப்பு, கோரசன் மாகாண (ISKP) மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) – கிளர்ச்சிக் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சிகளைப் பற்றி விவாதித்தன.
அரசு அறிவித்தது. அதே மாதத்தில், அமெரிக்கப் படைகள் தங்கள் பாகிஸ்தான் சகாக்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை நடத்தி, பலூச் BLA அமைப்பு, கோரசன் மாகாண (ISKP) மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) – கிளர்ச்சிக் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சிகளைப் பற்றி விவாதித்தன.மேலும் இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு இராணுவங்களும் பாகிஸ்தானில் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன. இது அமெரிக்க மத்திய கட்டளையின்படி, ஒருங்கிணைந்த காலாட்படை திறன்கள் மற்றும் தந்திரோபாயங்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் பாகிஸ்தானின் இராணுவம் கனிம வளம் நிறைந்த பலூச் பகுதிகளைப் பாதுகாக்கவும், அதன் சுரங்க உள்கட்டமைப்பு உலகத் தரம் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்தையும் செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
![]()