உலகம்

அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு எதிரான தீவிர பேச்சுவார்த்தைகள்; பிராந்திய சூழ்நிலை பதட்டம்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது 36 ஆண்டுகால அதிகாரத்தில் இதற்கு முன்னர் பல உள்நாட்டு கலவரங்களையும் சர்வதேச அழுத்தங்களையும் முறியடித்துள்ளார்.

இருப்பினும், தற்போது அவர் தனது ஆட்சியின் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக ஈரானின் தூதுவர்கள் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

சர்வதேசத் தடைகளால் முடங்கியுள்ள பொருளாதாரத்தினால் ஈரான் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரியில் வெடித்த பாரிய போராட்டங்கள் ஒடுக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.

கடந்த ஆண்டில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்கள் அழிக்கப்பட்டன.

ஈரானின் பிராந்தியக் கொள்கைகள் தற்போது சிதைவடைந்துள்ளன. அதன் நீண்டகால நட்பு நாடுகளும், நிழல் அமைப்புகளும் பலவீனமடைந்துள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

86 வயதான அலி கமேனியின் இஸ்லாமிய குடியரசு மீதான தீவிர பற்றும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான விட்டுக்கொடுக்காத பகையும், பேச்சுவார்த்தைகளில் அவர் கையாளும் தந்திரங்களும் இனிவரும் காலங்களில் அந்தப் பிராந்தியத்தின் விதியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *