உலகம்

ட்ரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் கிரீன்லாந்து பயணமான மன்னர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த தீவு மக்களுடன் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் டென்மார்க் மன்னர் பத்தாம் பிரெடெரிக் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான டென்மார்க் அரசின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. இது உலகின் மிகப் பெரிய தீவாகும். புவியியல் ரீதியாக இது வட அமெரிக்க கண்டத்தைச் சார்ந்ததாகும்.

கிரீன்லாந்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் ட்ரம்ப் காய் நகர்த்தி வருகிறார். பாதுகாப்பை காரணமாகக் கூறி அமெரிக்காவுடன் கிரீன்லாந்தை இணைப்பது அவசியம் என வாதிட்டு வருகிறார்.

இந்நிலையில், டென்மார்க் மன்னர் பிரெடெரிக், கிரீன்லாந்து தலைநகர் நுாக் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது, கடந்த ஓராண்டில் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *