இலங்கை

அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் அதிருப்தி

சுகாதாரச் சேவையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தமக்கும் விளங்குவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று  மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று அதன் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் மல்வத்து மகா விகாரைக்குச் சென்று, இலவச சுகாதாரச் சேவை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரருக்குத் தெரியப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரருக்கும் இது குறித்துத் தெளிவுபடுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *