உலகம்

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரவி சர்மா (32), 20-க்கும் மேற்பட்ட சொத்துகளை வைத்திருந்தும், வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சர்மா, Search Property Buyer’s Agency என்ற நிறுவனத்தின் நிறுவனர். கடந்த பத்து ஆண்டுகளில், அவர் சுமார் 25 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள, அதாவது ரூ.160 கோடி மதிப்புடைய சொத்துக்களை உருவாக்கியுள்ளார்.

அவரது நிறுவனம் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் REB Awards-இல் “Best Buyer’s Agency” பிரிவில் இறுதி பட்டியலில் இடம்பெற்றது.

மேலும், 2024-இல் அவர் “Australian Business News Young Entrepreneur of the Year” விருதைப் பெற்றுள்ளார்.

ஆனால், இத்தனை சொத்துகளை வைத்திருந்தும், அவர் எந்த சொந்த வீட்டிலும் வசிக்கவில்லை. மாறாக, சிட்னி Macquarie Park பகுதியில் உள்ள மூன்று படுக்கையறை கொண்ட பென்ட்ஹவுஸ் அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து, தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

சர்மா, “எனது சொத்து தொகுப்பு சுமார் $25 மில்லியன் மதிப்புடையது. சிட்னியில் ஒன்று அல்லது இரண்டு வீடுகள் மட்டுமே உள்ளன. மீதி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பரவியுள்ளன” என்று கூறியுள்ளார்.

“சொந்த வீடு” என்பது பலருக்கு கனவாக இருந்தாலும், இந்தச் சம்பவம், சிலர் முதலீட்டு நோக்கத்தில் வீடுகளை வாங்கி, தாங்கள் வசிப்பதற்கு வாடகை வீட்டைத் தெரிவு செய்வதை வெளிப்படுத்துகிறது.

அவர் தனது தற்போதைய வாடகை வீட்டில் ஒவ்வொரு வாரமும் எவ்வளவு செலவழிக்கிறார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

“நான் வாரத்திற்கு கிட்டத்தட்ட 1,420 AUD வாடகை செலுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சர்மா தனது 21 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினார். அவர் தனது முதல் சொத்து, டப்போவில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை 190,000 டொலருக்கு வாங்கியுள்ளார். பல ஆண்டுகளாக, அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாங்கி அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர் தனது போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து வளர்த்துவந்துள்ளார்.

ஷர்மா, Personal Finance with Ravi Sharma என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார், இது 100,000-க்கும் மேற்பட்ட subscriber-களைக் கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *