உலகம்

உக்ரைன் நிலப்பரப்புகளை விட்டுக்கொடுக்க முடியாது

உக்ரைன் நிலப்பரப்புகளை விட்டுக்கொடுக்க முடியாது என ஜெனிவா அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான 4 ஆண்டுகாலப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மத்தியஸ்தத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரண்டாம் நாள் முத்தரப்பு பேச்சுவார்த்தை  ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

உக்ரைன் மட்டும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்துவது நீதியற்றது என யுக்ரைன் ஜனாதிபதி வெலோதிமிர் ஜெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவால் கைப்பற்றப்படாத டான்பாஸ் நிலப்பரப்புகளை விட்டுக் கொடுக்க முடியாது எனவும், அது தொடர்பான எந்த முடிவும் பொதுவாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்படும் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

முதலாம் நாள் பேச்சுவார்த்தை மிகவும் பதற்றமாக இருந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நடைமுறைச் சிக்கல்கள் குறித்து ஆக்கபூர்வமாக ஆலோசிக்கப்பட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.

இதேவேளை இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்ததே பெரிய வெற்றி என அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் பாராட்டு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *