உலகம்

இம்ரான்கானுக்காக பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதிய 14 அணிதலைவர்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இம்ரான்கானின் உடல்நிலை பாதிப்பால் கவலையடைந்துள்ள இந்தியாவின் கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கங்குலி, அவுஸ்திரேலியாவின் கிரேக் சேப்பல், ஆலன் பார்டர், இங்கிலாந்தின் நாசர் உசேன் உள்பட 14 முன்னாள் அணி தலைவர்கள் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், இம்ரான் கானுக்கு அவர் விரும்பும் தனிப்பட்ட வைத்தியர்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *