உலகம்

அமெரிக்க போர் கப்பல்களால் குறி வைக்கப்படும் ஈரான்; மறைமுகமாக மிரட்டும் கமேனி

உலகிலேயே அமெரிக்க ராணுவம் வலிமையானது என ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால், பலமான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறும் உண்டு,” என ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகிலேயே வலிமையான ராணுவத்தை வைத்துள்ளதாக அமெரிக்க தொடர்ந்து ஜனாதிபதி கூறி வருகிறார்.

உலகின் வலிமையான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி பல முறை தாக்கப்பட்டு உள்ளது. ஈரானை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்பி வருவதாக அமெரிக்கர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ராணுவ தளவாடங்களில் போர்க்கப்பல் என்பதுஆபத்தானது தான்.

அதேநேரத்தில், போர்க்கப்லை கடலின் ஆழத்திற்கு அனுப்பும் அளவுக்கு மோசமான ஆயுதம் உள்ளன. 47 ஆண்டுகளாக ஈரானை, அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்

. இது சிறந்த ஒப்புதல். உங்களாலும் அதனை செய்ய முடியாது என நான் கூறுகிறேன். இவ்வாறு கமேனி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *