உலகம்

லண்டனில் தொலைபேசி திருட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது

லண்டனில் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 200க்கும் மேட்டபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கையடக்க தொலைபேசிகளை திருடியதற்காக 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 770 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பரந்த இந்த நடவடிக்கையின் போது ஏனைய குற்றங்களில் ஈடுபட்ட 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

“சந்தேக நபர்களை விரைவாகக் கண்டறிந்து கைது செய்ய” ட்ரோன்கள், இ-பைக்குகள் மற்றும் நேரடி முக அங்கீகாரம் போன்ற “அதிநவீன” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *