இந்தியா

பூட்டிய காரில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி; காதலர் தினத்தில் நடந்தது என்ன?

பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலர்கள்; சம்பவத்தால் அதிர்ச்சி இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பூட்டிய காருக்குள் காதலர்கள் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலர்கள் இருவரும் துப்பாகியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் மேலும் குறிபிட்டுள்ளதாவது,

26 வயதான ரேகா மற்றும் 32 வயதான சுமித்தும் 15 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் காதலர் தினம் கொண்டாடுவதற்கு வெள்ளிக்கிழமை (13) அன்று சந்தித்துக்கொண்டனர்.

இவ்வாறு சந்தித்து கொண்ட காதலர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அத்துடன், செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன இருவரின் பெற்றொரும் பொலிஸில் புகாரளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படியில், உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரேகா – டெல்லியை சேர்ந்த சுமித் இருவரையும் தேடி விசாரணையில் இறங்யுள்ளனர். அதன்படி, நொய்டாவின் 39ஆவது செக்டார் பகுதியில், காணாமல் போன சுமித்தின் கார், வீதியோரம் நின்றிருந்ததைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அப்போது, அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது உள்ளே ரேகா மற்றும் சுமித் இருவரும் சடலங்களாக கிடந்ததுள்ளனர். இருவரின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் தென்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், சுமித்தின் கையில் ஒரு துப்பாக்கி இருந்ததை, பார்த்த பொலிஸார், தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரின் சடலங்களையும் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

காதலர் தினத்தன்று சந்தித்துக் கொண்ட ஜோடிகள், ரேகாவை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, சுமித், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இருவரின் பெற்றோரிடம் விசாரணை செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, 15 ஆண்டுகளாக காதலித்து வந்த ரேகா – சுமித் இருவருக்கும், சமீபத்தில் ‘பிரேக் அப்’ ஆகியுள்ளது. இந்நிலையில், ரேகா, வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் காதலனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதில் ஏற்பட்ட விரக்தியில், கடைசியாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக்கூறி ரேகாவை, சுமித் அவர் வரவழைத்துள்ளார். அப்போது சம்பவ இடத்தில் காரை ஓரங்கட்டி பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது துப்பாக்கியால் காதலியைச் சுட்டுக் கொன்ற சுமித், தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *