இலங்கை

தமிழர்களுக்கு பாதகமான கிவுல் ஓயாத் திட்டம்; மக்களுக்கு விளிப்பூட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்!

மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்தினால் செயற்படுத்தப்படவுள்ள தமிழர்களுக்குப் பாதகமான கிவுல் ஓயா நீர்த்தேக்க குடியேற்றத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கி, தமிழ் மக்களை விளிப்படையச் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

அந்தவகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது, மறைந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தலுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களுக்கு கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலைதொடர்பில் தெளிவூட்டி விளிப்படையச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன், முல்லைத்தீவு ஊடக அமையத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *