முச்சந்தி

படத்திறப்பு – செம்பை மணவாளன் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் தோழர் சந்துரு என்கிற ஆர். சந்திரசேகரன் அவர்களின் படத்திறப்பு மற்றும் செம்பை மணவாளன் நினைவு சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

எழுத்தாளர் அண்டனூர் சுரா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் என்சிபிஎச் நிர்வாக இயக்குநர் க.சந்தானம் அவர்கள் சந்துரு அவர்களின் புகைப்படத்தை திறந்துவைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பெருமன்றம் மாநிலப் பொதுச்செயலாளர் மருத்துவர் த. அறம், கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் கோ.கலியமூர்த்தி ஆகியோர் இணைந்து சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

முன்னதாக சோலச்சி வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். செம்பை மணவாளன் நினைவு அறக்கட்டளை செயலர் செம்பை முருகானந்தம் நன்றியுரை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அஜய்குமார் கோஷ், கோவில் குணா, சிவானந்தம், மூட்டாம்பட்டி ராஜூ, துவாரகா சாமிநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *