இனப் பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டித் தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பில் நல்லூரில் நடந்த கலந்துரையாடல்

இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு கொண்டு வரவுள்ள ஏக்கிய ராஜ்ஜிய வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாகக் கூட்டாட்சி (சமஷ்டி) தீர்வை ஒரே குரலில் முன்வைப்பது தொடர்பான கலந்துரையாடல் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மதத் தலைவர்கள், தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ந.ஸ்ரீகாந்தா, வல்வெட்டித்துறை நகர பிதாவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், மக்கள்போராட்ட முன்னணியின் முக்கியஸ்தர் ராஜ்குமார் ராஜீவ்காந், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில்- சமூக சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
![]()