பலதும் பத்தும்

பல நோய்களுக்கு அருமருந்தாகும் சின்ன வெங்காயம்

சாம்பார் வெங்காயம் என பரவலாக அழைக்கப்படும் ஒன்றுதான் சின்ன வெங்காயம். சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம்.

ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும்.

சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும். இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.

மேலும் சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும்.

அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து. மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.

தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும். அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.

சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும். தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *