பலதும் பத்தும்

முடங்கிய 16 பிரபல யூடியூப் சேனல்கள்-பில்லியன் பார்வைகள் இருந்தும் என்ன பயன்?

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை பதிவேற்றிய பல பிரபல யூடியூப் (YouTube) சேனல்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை யூடியூப் நிறுவனம் எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிக பார்வையாளர்களைப் பெறும் நோக்கில், கணினி மூலம் தானியக்கமாக உருவாக்கப்பட்ட தரம் குறைந்த மற்றும் ஒரே உள்ளடக்கத்தைத் திரும்பத் திரும்பக் காட்டும் காணொளிகளை இந்த சேனல்கள் பதிவேற்றியதாக கூறப்படுகிறது.

மிகவும் பிரபலமான 100 AI சேனல்களில் 16 சேனல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட இந்த சேனல்கள் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களையும் பில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் கொண்டிருந்தன.

ஒட்டுமொத்தமாக 35 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களையும் சுமார் 4.7 பில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்ததாக கொண்டிருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், அவற்றின் வருடாந்திர வருமானம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய தரம் குறைந்த AI உள்ளடக்கங்கள் உண்மையான படைப்பாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கவனத்தைத் திசைதிருப்புவதாக பல பயனர்கள் முன்வைத்த முறைப்பாடுகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தரம் குறைந்த AI உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தி, உண்மையான மற்றும் தரமான படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க யூடியூப் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இந்த சேனல்களை அகற்ற யூடியூப் எந்த புதிய அமைப்பையும் பயன்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஸ்பேம் (Spam) மற்றும் கிளிக்பைட் (Clickbait) தடுப்பு கருவிகளையே பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *