பலதும் பத்தும்

டொனால்ட் ட்ரம்ப்பால் ஏற்பட்ட வாக்குவாதம்; பெற்ற மகளை சுட்டுக்கொன்ற தந்தை

அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்ற பிரிட்னடை சேர்ந்த 23 வயது லூசி ஹாரிசன் , தனது தந்தையுடன் ஏற்பட்ட அரசியல் மோதலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் வாரிங்டன் பகுதியைச் சேர்ந்த 23 வயது லூசி ஹாரிசன், கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது தந்தை கிறிஸ் ஹாரிசனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் சுடப்பட்டு உயிரிழந்தார்.

மரணம் தொடர்பான விசாரணை, தற்போது செஷையர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லூசியின் காதலர் சாம் லிட்லர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த அன்று காலை, லூசிக்கும் அவரது தந்தைக்கும் இடையே டொனால்ட் ட்ரம்ப் குறித்து கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்கத் தயாராகிக் கொண்டிருந்த சமயம் அது.

பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து லூசி கேட்ட கேள்விகளுக்கு, கிறிஸ் ஹாரிசன் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லூசி அழுதுகொண்டே தனது அறைக்குச் சென்றுள்ளார்.

அன்று மாலை லூசி லண்டன் திரும்ப வேண்டியிருந்தது. விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்குச் சற்று முன்பு, கிறிஸ் தனது மகளைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்றஅடுத்த சில நொடிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

கிறிஸ் ஹாரிசன் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அவர்கள் இருவரும் துப்பாக்கிச் சூடு குறித்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்ட முயன்றபோது அது தவறுதலாக வெடித்ததாகவும் கூறியுள்ளார்.

தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மீண்டு வந்தவர் என்றும், அன்று உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் மது அருந்தியிருந்ததாகவும் கிறிஸ் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து டெக்சாஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இருப்பினும், கிறிஸ் ஹாரிசனுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அமெரிக்க நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *