உலகம்

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில்
கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது.

இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது.

உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில்  (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.

இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலம் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன.

தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *