இலங்கை

அநுரவிற்கு எதிராகப் பாயும் பௌத்த பீடங்கள்: கொழும்பை முற்றுகையிடப்போகும் 2,000 தேரர்கள்

பல தசாப்தங்களாக இலங்கையின் ஆட்சியைத் தீர்மானித்து வந்த பௌத்த பீடங்களின் அரசியல் செல்வாக்கையும், சலுகைகளையும் தற்போதைய அரசாங்கம் கட்டுப்படுத்த முனைவதாக அண்மை நாட்களாகப் பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், அரசாங்கம் பௌத்த மதத்திற்கு வழங்கும் முன்னுரிமையைக் குறைப்பதாகக் குற்றம்சாட்டி, எதிர்வரும் (20-02-2026) 2,000 தேரர்கள் கொழும்பை முற்றுகையிடவுள்ளனர்.

இவ்வாறு, கல்விச் சீர்திருத்தம் மற்றும் விகாரைகளின் சொத்துகள் தொடர்பான புதிய நடைமுறைகள் பௌத்த மதத்திற்கு எதிரானவை எனச் சித்திரிக்கப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக மகா சங்கத்தினரை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில், மத உணர்வுகளைக் கேடயமாகப் பயன்படுத்தி, ஆட்சி மாற்றத்தை விரும்பும் சக்திகள் தேரர்களை முன்னிறுத்தி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைச் சிதைக்க முற்படுவதாக அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

மதச்சார்பற்ற அல்லது சமத்துவமான போக்கைக் கடைப்பிடிக்க முனையும் அரசாங்கத்திற்கு எதிராக, மத ரீதியிலான கோஷத்தை எழுப்பிப் போராட்டங்களை முன்னெடுப்பது புதிய ஆட்சிக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *