இந்தியா

இந்திய பாராளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒன்பது பாடசாலைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி பொலிஸின் மின்னஞ்சல் முகவரிக்கு  (09) காலை 8.30 மற்றும் 9.00 மணியளவில் இரண்டு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,

“டெல்லி காலிஸ்தானாக மாறும் – பிப். 13, பகல் 1.11 மணிக்கு பாராளுமன்றத்துக்குள் குண்டுவெடிக்கும்” என்று அப்சல் குரு மற்றும் காலிஸ்தான் தேசிய இராணுவத்தின் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளின் பெயர்களை குறிப்பிட்டு குண்டுவெடிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு டெல்லி பொலிஸார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்திலும் பொலிஸார், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *