இலங்கை

சிறை செல்லும் பாதையில் நாமல்!; அமைச்சர் வசந்த சமரசிங்க 

ஊழல், மோசடி மற்றும் மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒருபகுதியினர் ஏற்கனவே சிறைக்குள் இருக்கும் நிலையில், நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் சிறைக்கு செல்லும் பாதையில் இருக்கின்றனர் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான உறுப்பினர்கள் தெரிவுக்கான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாமல் ராஜபக்‌ஷவை சீஐடிக்கு அழைக்கும் போது கட்சியினர் அனைவரையும் அவர்கள் கொழும்புக்கு அழைத்துவருவது ஏன்? அவரின் நாடித்துடிப்பை பார்க்கவும் நலன் விசாரிக்கவுமா அவரை சீஐடிக்கு அழைக்கின்றனர். தாய், தந்தை, பிள்ளைகள், சித்தப்பா என அனைவரும் மக்கள் பணத்தை கொள்ளையடித்ததால் மக்கள் அவர்களை தோற்கடித்தனர். இப்போது வழக்கு விசாரணைகள் நடக்கின்றன. தற்போது முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு பகுதியினர் உள்ளே இருக்கின்றனர்.

தற்போது நாமல் உள்ளிட்டோரும் அங்கு செல்லும் பாதையில் இருக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது தமது உறுப்பினர்களையும் அழைத்துவந்து தாம் போன்றோர் திருடர்கள் இல்லை என்று காண்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாடு திருடர்கள் என்பதற்கு சாட்சியாகும். அந்த சாட்சிகளுக்கமைய விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு சீஐடி மற்றும் எப்.சீ.ஐ.டி ஆகியவற்றுக்கு அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே திருடிய அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் உள்ளே இருக்கின்றனர். நாட்டின் சட்டம் செயற்படுத்தப்படும். மக்கள் ஆணையும் செயற்படுத்தப்படும். இதற்கு பயந்தே நாமல் போன்றோர் கொக்கரிக்கின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *