இலங்கை

திருகோணமலை சனீஸ்வரன் கோவிலில் கிளம்பிய புதிய சர்ச்சை

திருகோணமலை சனீஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்திருந்த பெண் ஒருவர் குறித்த ஆலயம் தங்களுடையது என கூறிய விடயம் பிரதேச மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இரு பௌத்த பிக்குகளுடன்  தந்திருந்த மரத்தடி பகுதியைச் சேர்ந்த சிட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கூறியுள்ளார்.

சனீஸ்வரன் ஆலயம் தங்களுடையது எனவும் தாம் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருவதாகவும் தெரிவித்து ஆலயத்தின் உட்பகுதியில் ஆலய நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி சிட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயத்திற்கு வருகை தந்த இரு பிக்குகளும் சிட்டி எரித்து வழிபாடு செய்ததுடன் அங்கு தாம் கொண்டு வந்த கதிரையில் அமர்ந்து விட்டு எதுவும் கதைக்காமல் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலய பகுதிக்குள் தனியாரினால் சிட்டி விற்பனை செய்ய ஆலய நிர்வாகம் தடை விதித்திருக்கின்ற நிலையில் அதனை மீறி ஆலய வளாகத்தினுள் குறித்த பெண் சிட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

GalleryGalleryGallery

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *